இந்தியா

கர்நாடகாவில் 1400 கோடி ரூபாவினை முதலீடு செய்துள்ள முத்தையா முரளிதரன்

Published

on

கர்நாடகாவில் 1400 கோடி ரூபாவினை முதலீடு செய்துள்ள முத்தையா முரளிதரன்

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 1400 கோடி இந்திய ரூபா பணத்தினை முதலீடு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மென்பான உற்பத்தி நிறுவனமொன்றினை நிறுவும் நோக்கில் இவ்வாறு முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கர்நாடகாவின் பாடானாகுப்பியின் சமாராஜனாகரா மாவட்டத்தில் இந்த உற்பத்திச்சாலை நிறுவப்படுவதாக கூறப்படுகின்றது.

கர்நாடகாவில் 1400 கோடி ரூபாவினை முதலீடு செய்துள்ள முத்தையா முரளிதரன் | Murali To Invest 1400Cr In India

கர்நாடகாவின் சிறு மற்றும் பாரிய கைத்தொழிற்துறை அமைச்சர் எம்.பி. பாடீல் இந்த விடயத்தை இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் குறித்து முரளிதரனுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியுள்ளார்.

முத்தையா மென்பானம் மற்றும் இனிப்புப் பண்டங்கள் என்ற பண்டக்குறியின் பெயரில் இந்த உற்பத்திச்சாலையின் உற்பத்திகள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த உற்பத்திச்சாலை 230 கோடி ரூபா முதலீட்டில் முன்னெடுக்கப்பட இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது முதலீடு ஆயிரம் கோடி ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சில ஆண்டுகளில் இந்த முதலீட்டுத் தொகை ஆயிரத்து நாநூறு கோடியாக உயர்வடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் இந்த உற்பத்திச்சாலையின் உற்பத்திகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட காணி தொடர்பிலான சிறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு தாம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக அமைச்சர் பாடீல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version