இந்தியா

புதுடில்லி மருத்துவமனையில் தீப்பரவல்:குழந்தைகள் பலி

Published

on

புதுடில்லி மருத்துவமனையில் தீப்பரவல்:குழந்தைகள் பலி

இந்தியாவின் புதுடில்லி (New Delhi) – விவேக் விஹாரில் அமைந்துள்ள குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளின் உடலங்கள் கட்டிடத்தின் மேல் தளங்களில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எஞ்சிய குழந்தைகள், மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், முழு கட்டிடமும் தீப்பிழம்புகளால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று குஜராத் ராஜ்கோட்டில் சிறுவர்களுக்கான கேளிக்கை இடம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் இதுவரை 9 சிறுவர்கள் உட்பட்ட 37 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version