இந்தியா
ஓய்வெடுக்கவுள்ள அயோத்தி ராமர்
ஓய்வெடுக்கவுள்ள அயோத்தி ராமர்
அயோத்தி ராமர் கோவிலை தினமும் ஒரு மணி நேரம் மூடுவதற்கு கோவிலின் அறக்கட்டளை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, குறித்த கோவிலை தினமும் பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவிக்கையில்,
“கோவிலின் கருவறையில் வீற்றிருக்கும் குழந்தை வடிவ ராமருக்கு ஐந்து வயதே ஆகிறது. அதிகாலை 4 மணிக்கு கண்விழிக்கும் அவரால் தொடர்ந்து விழித்துக்கொண்டே இருக்க முடியாது.
இதன் காரணமாக, அவருக்கு ஓய்வு வழங்குவதற்காகவே தினமும் ஒரு மணிநேரம் கோவிலை மூட தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 500 வருட போராட்டங்களுக்கு பின்னர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கடந்த மாதம் 22ஆம் (22.01.2024) திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தது.
பிரமாண்டமாக நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ஏராளமான பிரபலங்கள் வந்திருந்ததோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் சமய சடங்குகள் செய்யப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணிநேரம் ஓய்வு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளமை பக்தர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.