இந்தியா

உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.., தமிழகம், புதுச்சேரியில் தொடரும் மழை- வானிலை மையம் தகவல்

Published

on

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

”கேரளா கடலோர பகுதிகளில் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கேயும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை(ஜன.12) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

(ஜன.13) முதல் (ஜன.17) வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 30-31ºC மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23ºC இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இன்று மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 -45km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும்” என்று அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version