இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் பரவல்

Published

on

இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் பரவல்

இந்தியா முழுவதும் இதுவரை 23 பேருக்கு ‘ஜெ.என். 1’ வகை கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட்பரவல் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து கோவிட் வைரஸிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 656 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version