இந்தியா

இராமேஸ்வர கடற்றொழிலாளர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

Published

on

இராமேஸ்வர கடற்றொழிலாளர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமேஸ்வரம் மண்டபம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து நேற்று முன் தினம் கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 27 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் இன்று (17) இராமேஸ்வரத்தில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று முன் தினம்(15) இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் பாம்பன் சாலை பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று(16) ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோபு அவர்கள் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் பாம்பன் சாலை பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்ததை மீளப் பெறுவதாகவும், ஆனால் இன்று (17) இராமேஸ்வரத்தில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version