இந்தியா

உதயநிதியின் சனாதனம்.. எதிர்த்து பேசினால் நாக்கை பிடுங்குவோம்: அமைச்சர் சர்ச்சை

Published

on

உதயநிதியின் சனாதனம்.. எதிர்த்து பேசினால் நாக்கை பிடுங்குவோம்: அமைச்சர் சர்ச்சை

சனாதனத்தை எதிர்த்து பேசினால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என்று மத்திய பாஜக அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சர்ச்சையாக பேசியுள்ளார்.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்று பேசியிருந்தார்.

இவரின் பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், உதயநிதி, தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

இதனையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “சனாதனத்திற்கு எதிராக பேசுபவர் யாராக இருந்தாலும் நாட்டில் அரசியல் மற்றும் மதிப்பை தக்கவைக்க முடியாது என்றும், சனாதனத்தை ஒழிப்பதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் கூறியுள்ளார்.

மேலும், சனாதனத்தை காப்பாற்றுவதற்கு முன்னோர்கள் தங்களது உயிரை பணயம் வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சனாதனத்தை எதிர்த்து பேசினால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என்று சர்ச்சையாக பேசியுள்ளார். தற்போது, அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version