இந்தியா
நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டியது சனாதனம் அல்ல, மாட்டுச்சாணம்
நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டியது சனாதனம் அல்ல, மாட்டுச்சாணம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மாயோன் திருவிழா மற்றும் மூக்கையா தேவரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலர் வணக்க நிகழ்வு சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது, “வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை திமுகவிலிருந்து வெளியேற்றினால் நாம் தமிழர் கட்சி திமுகவுக்கு முழு ஆதரவை தரும்.
இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றினால் எல்லாம் மாறிவிடுமா? ஆல் இந்தியா ரேடியோ என்று தான் இருக்கிறது. ஆல் பாரத ரேடியோ என்று இல்லை” என்று கூறினார்.
குஷ்பு கோயில் பற்றி சீமான் கூறியது..
மேலும் பேசிய சீமான், “நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டியது சனாதனம் அல்ல, மாட்டுச்சாணம். குஷ்புவுக்கு கோயில் கட்டியது தமிழர்களின் அறியாமையும், முட்டாள்தனத்தையும் காட்டுகிறது.
மூடத்தனமாக குஷ்புவுக்கு கட்டிய கோயிலை இடிக்காமல் விட்டது தவறு. ஆனால், அது எங்களுடைய பெருந்தன்மை” என்றார். அதுமட்டுமல்லாம், நடிகை குஷ்புவுக்கு கட்டிய கோயில் எங்குள்ளது என்று பார்த்தால் அதை இடித்து விடலாம் என்று கூறியுள்ளார்.