இந்தியா

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கொடுங்க! வழிமறித்த பெண்கள்

Published

on

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கொடுங்க! வழிமறித்த பெண்கள்

தமிழக மாவட்டம் தென்காசியில் மகளிர் உரிமைத் தொகை கொடுங்க முதல்வர் மகனே என்று கையில் பதாகைகளை ஏந்தியபடி அமைச்சர் உதயநிதியை வழிமறித்து பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததையடுது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

பின்பு, யாரெல்லாம் இந்த மகளிர் உரிமைத்தொகையை பெறலாம் என்று பயனாளிகளுக்கான தகுதியினை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பதற்காக தென்காசி மாவட்டத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றிருந்தார். அவர், தென்காசி அருகே வந்து கொண்டிருந்த போது 10 -வது வார்டு பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் தலைமையில் 50க்கும் அதிகமான பெண்கள் அமைச்சரின் காரை வழிமறித்தனர்.

அப்போது, அவர்களை பார்த்து காரை நிறுத்திய அமைச்சரிடம், “முதல்வர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தும் முறையான விசாரணை எங்களுக்கு வரவில்லை. நாங்கள் அதற்கு தகுதியானவர்கள். எங்களுக்கும் உரிமைத் தொகை ரூ.1,000 தர வேண்டும்” என்று அங்கிருந்த பெண்கள் கூறினர்.

பின்பு, பெண்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் உரிய விசாரணை மேற்கொள்வதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உறுதியளித்தார்.

Exit mobile version