இந்தியா
என் தலைக்கு எதுக்கு ரூ.10 கோடி.. தலையை சீவ ரூ.10 சீப்பு போதும்!
என் தலைக்கு எதுக்கு ரூ.10 கோடி.. தலையை சீவ ரூ.10 சீப்பு போதும்!
அயோத்தி துறவி ஒருவர் தமிழக அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி எனக் கூறியிருந்த நிலையில், உதயநிதி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக அமைச்சர் உதயநிதி, “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும். அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்று கூறினார்.
அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், அவர் தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில், உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அவர், உதயநிதி ஸ்டாலின் போட்டாவை கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோ ஒன்றும் வெளியாகியது.
இந்நிலையில், தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,”இந்த மிரட்டல் குறித்து பயப்பட மாட்டேன் என மீண்டும் உறுதியாக சொல்கிறேன்.
என் தலைக்கு ரூ.10 கோடி எல்லாம் வேண்டாம். என் தலையை சீவ ரூ.10 சீப்பு மட்டுமே போதும்” என கருணாநிதி பாணியில் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
மேலும், ஒரு சாமியாரிடம் எப்படி ரூ.10 கோடி இருக்க முடியும். அப்படி என்றால் அவர் போலி சாமியார் என்று கூறியுள்ளார்.