செய்திகள்
சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் விற்பனை: வெளியான அறிவிப்பு


சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் விற்பனை: வெளியான அறிவிப்பு
எதிர்வரும் வாரத்தில் சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக நாளாந்தம் சுமார் ஒரு இலட்சம் முட்டைகள் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
முட்டையின் விலை அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தையில் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை எனவும், முட்டையின் விலை அதிகரிப்பை கருத்தில் கொண்டு நுகர்வோருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login