இந்தியா

எலும்பும் தோலுமாக அரிக்கொம்பன் யானை!

Published

on

தமிழகத்தின் தேனி மாவட்டத்திலும், கேரளாவிலும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு கோதையாறு பகுதியில் விடப்பட்டது.

யானையின் கழுத்தில் ரேடியோகாலர் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் எலும்பும் தோலுமாக உடல் மெலிந்து காணப்படும் புகைப்படம் வைரலானது.

தினமும் யானை சாப்பிடும் உணவு மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வந்தது.

உடல் மெலிவடைய காரணம் புதிய சீதோஷ்ண நிலை மற்றும் உணவு காரணமாக இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப்பிரியா கூறுகையில், அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது, உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இருக்கிறது.

முன்பு அரிசி மட்டுமே சாப்பிட்டு வந்ததால் உப்புசமாக இருக்கலாம், ஆனால் தற்போது காட்டு உணவுகள் மற்றும் புல் வகைகளை சாப்பிட்டு வருகிறது.

தற்போது தான் வனவிலங்குகளுக்கு உரித்தான தோற்றத்தில் மாறிக்கொண்டிருக்கிறது, மருத்துவர்களின் கண்காணிப்பிலேயே இருந்து வருகிறது.

யானைக்கு பிடித்த உணவுகள் கிடைக்காததால் மீண்டும் ஊருக்குள் நுழைய முயற்சி எடுத்தது, ஆனா் தீக்கு பயப்படும் என்பதால் வனத்துறையினர் தீயை வைத்து காட்டுக்குள் திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version