இந்தியா
சிசுவை தூக்கி வீசி கொலை!
தான் பிரசவித்த சிசுவை தாய் ஒருவர் தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் கொல்கத்தாவில் கஸ்பா பகுதியில் இடம்பெறுள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின் பிரசவ அறையில் தனது குழந்தையை பிரசவித்துள்ளார். இந்நிலையில் குழந்தை பிறந்ததும் அழ ஆரம்பித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாது தனது சிசுவை கழிவறையின் ஜன்னலை உடைத்து வெளியே வீசியுள்ளார்.
இந்த சத்தம் கேட்டு அங்கு அயலவர்கள் சென்ற பொழுது கழிவறையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் தாயையும் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிசாரின் விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து தாய் மீது வழக்குப் பதிவு செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
You must be logged in to post a comment Login