இந்தியா
செல்லப் பிராணிகளை ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டம் அறிமுகம்


சென்னையில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வீடுகளில் எத்தனை உள்ளன என்ற முறையான புள்ளி விவரம் இல்லாததால் அவற்றை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சி வெப் சைட்டில் செல்லப்பிராணிகள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் புதிய திட்டம் ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி கால்நடை டாக்டர் கமால் உசேன் தெரிவித்துள்ளார்.
செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை ரூ.50 கட்டணம் செலுத்தி இதனை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்குகள் குறித்த சரியான புள்ளி விவரம் இன்னும் கிடைக்கவில்லை. அதனை முறைப்படுத்துவதற்காகத்தான் ஆன்லைன் பதிவு முறை கொண்டுவரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.