இந்தியா
இந்தியாவின் குடியரசுத் தலைவராக பழங்குடியின திரவுபதி முர்மு வெற்றி!


இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
வெற்றி பெற்ற புதிய குடியரசு தலைவருக்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.