இந்தியா
அடுத்த ஜனாதிபதி யார்? – வாக்குப்பதிவு ஆரம்பம்
இந்தியா -எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குகளை பதிவுசெய்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க் களும் அடங்குவார்கள். பிரதமர் மோடி, பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடைகிறது. அதன்பின் வாக்குப் பெட்டிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, இன்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.
You must be logged in to post a comment Login