இந்தியா
ஜனாதிபதி தேர்தல்! – எடப்பாடி தலைமையில் கூட்டம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இம்மாதம் 24 முடிவடைய ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நாளை இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் வாக்களிக்க உள்ளனர். எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வாக்களிக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் வாக்களிக்க உள்ளனர்.
இதில் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசிக்க, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது பற்றி விவாதிப்பது மட்டுமின்றி அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வழக்கமாக தலைமைக்கழகத்தில் தான் நடைபெறும் ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ள காரணத்தால் அங்கு இந்த கூட்டத்தை நடத்த முடியவில்லை. அதே போல் எடப்பாடி பழனிசாமியின் அரசு வீட்டிலும் இந்த கூட்டத்தை நடத்த முடியாததால் கிரவுன் பிளாசா ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
#India
You must be logged in to post a comment Login