இந்தியா
கொரோனாத் தொற்று! – தொடர் கண்காணிப்பில் முதலமைச்சர் ஸ்டாலின்


தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவரது நுரையீரலில் 10 சதவீதம் சளி பாதிப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவரை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.