இந்தியா
மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா!


கொரோனாத் தொற்றால் இந்தியாவில் புதிதாக 16,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 18 ஆயிரத்து 564 ஆக உயர்ந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.10 லட்சம் பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவில் தற்போது ஒரு வார பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.