செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் அரசை விட்டு விலகுவேன்! – வாசு எச்சரிக்கை


“அரசு சர்வதேச நாணய நிதியத்தை நாடினால், நான் இந்த அரசில் அங்கம் வகிக்கமாட்டேன். இது உறுதி.”
– இவ்வாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கடன் கிடைக்கும். அந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல.
அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், சுகாதாரம், கல்வித்துறைக்கான ஒதுக்கீடுகளைக் குறைத்தல், விலைத்தளம்பல் உள்ளிட்ட நிபந்தனைகள் பயங்கரமானவை.
அப்படியான நிபந்தனைகளை ஏற்கும் அரசியல் அங்கம் வகிக்கமாட்டேன். பதவி துறப்புக் கடிதத்தை எழுதுவதற்கு ஒரு நிமிடம்கூட செல்லாது” – என்றார்.
You must be logged in to post a comment Login