செய்திகள்
ரூபாவின் பெறுமதியில் மேலும் வீழ்ச்சி!


நாட்டில் டொலரின் பெறுமதியை மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி டாலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
நாட்டின் முன்னணி வங்கிகளின் நாணயமாற்று விகிதங்கள் அடிப்படையில் டொலரின் விற்பனை பெறுமதி உயர்வடைந்துள்ளது.
மக்கள் வங்கி, இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியன இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 275 ரூபாவாக பதிவாகி உள்ளது.
மக்கள் வங்கியின் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 264.33 ரூபா, விற்பனை விலை 274.99 ரூபா.
இலங்கை வங்கியில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 265 ரூபா, விற்பனை விலை 275 ரூபா.
கொமர்ஷல் வங்கியின் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 265 ரூபா, விற்பனை விலை 275 ரூபா.
சம்பத் வங்கியின் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 265 ரூபா. விற்பனை விலை 275 ரூபா எனவும் பதிவாகியுள்ளது.