Connect with us

செய்திகள்

பாரிஸின் தெருவை நிறைத்த ஆட்டு மந்தைகள், மாட்டு வண்டில்கள்..!

Published

on

275210064 10228715919106049 9142978012090996253 n

பாரிஸின் அழகிய தெரு என்று சொல்லப்படுகின்ற Champs-Elysées இன்று கிராமங்களின் காட்சிகளால் நிறைந்தது.

ஆயிரக்கணக்கான ஆட்டு மந்தைகள், குதிரைகள் மற்றும் கால்நடைகளின் மலை மேய்ச்சல் நில அணிவகுப்பும் கிராமத்துக் கலைஞர்களது ஆடல் பாடல் களியாட்டங்களும் அந்த தெருவின் வழமையையே மாற்றியிருந்தன.

உலகப் புகழ் கார் கம்பனிகளினது காட்சி அறைகளும், வாசனைத் திரவியம் முதல் ஆடம்பர அணிகலன்களது வர்த்தக மையங்களும் அணியாக அமைந்திருக்கின்ற தெருவில் மந்தைகளின் இரைச்சலும் மணி ஒசைகளும் குதிரைகள், வண்டில் மாடுகளது குளம்புச் சத்தங்களும் கேட்டுக்கொண்டிருந்தன.

275240229 10228715918626037 37163952189995958 n

பல நூறு கிலோ மீற்றர்கள் பயணம்செய்து வந்த மலை ஆடுகள் உட்பட சுமார் இரண்டாயிரம் மந்தைகள் இன்றைய கண்காட்சியில் பங்குகொண்டன. பாரிஸ் வேர்சாய்யில் கடந்த சனியன்று ஆரம்பமாகிய சர்வதேச விவசாயக் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வாக இந்த “Transhumance” என்னும் மந்தை மற்றும் கால்நடைகளின் பருவகால மேய்ச்சல் கண்காட்சி நடைபெற்றிருக்கிறது.

சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாடோடிகளது பாரம்பரிய மந்தை மேய்ச்சல் முறைமையே “டிரான்ஸ்ஹுமன்ஸ்” (Transhumance) எனப்படுகிறது. மந்தைகள் மற்றும் கால்நடைகளைக் கொழுக்கவைப்பதற்கும் இனப்பெருக்குவதற்கும் அவற்றை மலைகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் இடையே குளிர் கால மற்றும் கோடைகால மேய்ச்சல் தரவைகளுக்கு இடம்பெயர்த்துவதே இதுவாகும்.

274860753 10228715918226027 7682719658144469750 n 1

கிராமங்களிலேயே அருகி மறைந்து கொண்டிருக்கின்ற இந்த மலை நில மந்தை மேய்ப்புப் பாரம்பரியம் உல்லாசப் பயணிகளுக்காக இந்த முறை தலைநகரின் மையத்தில் கண்காட்சியாக நடத்திக் காண்பிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் கூடிய பல்லாயிரக் கணக்கானோர் உக்ரைன் போர்ப் பதற்றத்தை மறந்து கால்நடைகளோடு மலைவாழ்வைரசித்து மகிழ்ந்ததைக் காணமுடிந்தது.

274854464 10228715919986071 5819905963243451819 n 274819451 10228715919586061 7733681446733474047 n

#World

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 8 Rasi Palan new cmp 8
ஜோதிடம்14 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 10.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 10.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 10, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 7 Rasi Palan new cmp 7
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 09, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 6 Rasi Palan new cmp 6
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 08.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 8, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 5 Rasi Palan new cmp 5
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 07.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 7, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 4 Rasi Palan new cmp 4
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 06.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 06, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 3 Rasi Palan new cmp 3
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 05.05. 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 05, 2024, குரோதி வருடம்...

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...