செய்திகள்
சிறுபான்மையின மக்களுக்காக நேசக்கரம் நீட்டியவரே மங்கள! – லக்ஷ்மன் கிரியல்ல
” மங்கள சமரவீர மனித உரிமைகளை மதித்தவர். சிறுபான்மையின மக்களுக்காக நேசக்கரம் நீட்டியவர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் அமரர் மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்தான் அவர் இவ்வாறு கூறினார்.
” மங்கள சமரவீர அரசியலில் புரட்சி செய்தவர். 1989 ஆம் ஆண்டு தாய்மார் முன்னணியை உருவாக்கினார். காணாமல்போனவர்கள் பட்டியலை தயாரித்தார். அந்த பட்டியலையே தற்போதைய பிரதமர் அன்று ஜெனிவாவுக்கு எடுத்துச்சென்றார். எனினும், அவர் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டார்.
மங்கள சமரவீர சிறுபான்மையின மக்களுக்கு நேசக்கரம் நீட்டியவர். நீதியின் பக்கம் நின்றவர். அதனால்தான் அவர் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் எமது நாட்டுக்கு ஆதரவு கிட்டியது.
பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என மங்கள அறிவித்தபோது நாம் வியப்படைந்தோம். ஆனால் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஓர் அமைப்பை ஆரம்பித்தார். அவர் எப்போதும் தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் செயற்பட்டவர்.” – என்றார் கிரியல்ல.
#SriLankaNews
You must be logged in to post a comment Login