செய்திகள்
பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு சர்வதேசத்தை ஏமாற்றவே! – சார்ள்ஸ் குற்றச்சாட்டு
அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவானது, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான நகர்வாகும் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டமும், புதிய முன்மொழிவும் ஒத்ததாகவே காணப்படுகின்றன எனவும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இம்மாதம் ஆரம்பமாகவுள்ளது. அதேபோல ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்விரண்டு விவகாரங்களையும் கையாள்வதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. மாறாக இது விடயத்தில் அரசிடம் உண்மையான நல்லெண்ணம் இல்லை.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login