செய்திகள்
மீனவர்களிடையே மோதல்! – அரசில் இராஜதந்திரமா? – கேள்வியெழுப்புகிறார் சார்ள்ஸ் நிர்மலநாதன்
வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசினால் மேற்கொள்ளப்படுகின்றனவா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமுன்றத்தில் இன்று கடற்றொழில் அமைச்சரிடம் கேள்வியொன்றை எழுப்பிய அவர்,
” இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என நீங்கள் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றில் உறுதியளித்தீர்கள். ஆனால் அது நடக்கவில்லை.
தற்போது கடற்றொழிலுக்கு செல்பவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன..
இதனை கண்டுகொள்ளாமல் பிரச்சினைக்கு தீர்வை காணாமல் இருப்பது இரு தரப்பையும் மோதவைக்கும் இராஜதந்திர முயற்சியா.” – என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
” அரசியல் உள்நோக்கத்துடன்தான் இந்த கேள்வியை எழுப்புகின்றீர்கள். உங்கள் நல்லாட்சியில் எதுவும் செய்யப்படவில்லை. எங்கள் ஆட்சியில் இப் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்.” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login