செய்திகள்
இராஜாங்க அமைச்சர்களுக்கு ஆப்பு! – செலவுகளை கட்டுப்படுத்த அரசு திட்டம்
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் செலவுகளை மேலும் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான சிறப்பு ஆலோசனைகள் நிதி அமைச்சகத்தின் ஊடாக அனைத்து அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது .
வரவு-செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை தவிர வேறு எந்த அபிவிருத்தி திட்டங்களுக்கும் நிதி கோரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாகாண செலவுகள் முடிவடைந்து வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி வெளியிடப்படும் வர்த்தமானி மற்றும் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அரச செலவுகள் குறைப்பு தொடர்பான விடயங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியத்தின் எரிபொருள் கொடுப்பனவு பெறும் அமைச்சர்கள் ,மந்திரிகள் மற்றும் நிறுவன தலைவர்களின் எரிபொருள் செலவுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
மேலும் அரசு நிறுவனங்களின் தொலைபேசிகள், ஏனைய செலவுகள் மற்றும் அனைத்து செலவுகளும் கடுமையாக கட்டுப்படுத்தப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login