செய்திகள்
பாதாளத்தில் பதுங்கினார் ட்ரூடோ!!!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள தங்கள் வீட்டை விட்டு இரகசிய இடத்திற்கு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை இரத்து செய்ய வலியுறுத்தி சுமார் 50 ஆயிரம் கனரக வாகன சாரதிகள் தலைநகரில் குவிந்துள்ளதையடுத்து, பாதுகாப்புக் காரணங்களால் பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசிய பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் கனடாவில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக அமெரிக்க- கனடா எல்லையைக் கடப்பதற்கு கனரக வாகன சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென அரசின் அறிவிப்பை எதிர்த்து, ஒட்டாவாவில் நேற்று நூற்றுக்கணக்கான கனரக வாகன சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள மறுக்கும் கனரக வாகன சாரதிகள் மிகக் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களே என கனேடியப் பிரதமர் தெரிவித்திருந்தார்.
மறுநாளே, தலைநகருக்கு செல்லும் பாதை முழுவதுமாக, குறிப்பாக 45 மைல்கள் தொலைவிற்கு கனரக வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தி, தமது எதிர்ப்பை சாரதிகள் வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்தநிலையில் போராட்டமானது பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுவதால், கனடா பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியேறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை பிரதமர் இரகசிய இடத்திற்கு செல்லவில்லை எனவும், அவர் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் வீட்டில் இருந்தே பணியாற்றுவதாகவும் அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவின் தலைநகர் ஒட்டாவில் உள்ள பாராளுமன்ற ஹில் பகுதியில் கூடிய போராட்டக்கார்கள் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை கனரக வாகன சாரதிகளின் இப்போராட்டமானது, நாட்டு நலனுக்கு எதிரானது எனவும், அறிவியலுக்கு எதிரானது எனவும் சமூகத்திற்கு எதிரானது எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
#World
You must be logged in to post a comment Login