செய்திகள்
தினமும் இரு மணி நேர மின்வெட்டே தீர்வு!!
நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலமும் இரு மணித்தியாலங்களும் மின்வெட்டு அவசியமானது என இலங்கை மின்சார சபை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இல்லையெனில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டை தவிர்க்க முடியாமல் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 60 வீதமாக குறைந்துள்ளதாகவும் அது 40 வீதத்திற்கு குறைந்தவுடன் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
எரி பொருளை வாங்குவதற்கு கிடைக்காததாலும் தனியார் டீசல் மின்சார உற்பத்தி நிலையங்களில் அவசர கொள்முதலில் அதிக விலைக்கு மின்சாரம் பெற முடியாததால் தினமும் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுவதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இப்படியே தொடர்ந்தால் அடுத்த மூன்று நான்கு வாரங்களுக்கு தினமும் 7 முதல் 8 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login