செய்திகள்
முகக்கவசம் தேவையில்லை! – கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரித்தானியா
கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சிலவற்றை பிரித்தானியா அரசாங்கம் இன்று அதிரடியாகத் தளர்த்தியுள்ளது
கொவிட்- தடுப்பூசித் திட்டம் வெற்றியடைந்துள்ளமையினால், மக்களிடையே கடுமையான நோய் ஏற்படுவதும் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதும் குறைவடைந்துள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இன்று முதல் மக்கள் முகக்கவசம் கட்டாயமாக அணியத் தேவையில்லை எனவும், மக்கள் ஒன்றுகூடலுக்கான பெரிய இடங்களுக்குள் நுழைவதற்கு இனி தடுப்பூசிச் சான்றுகள் தேவையில்லையெனவும் பிரித்தானியா அரசு அறிவித்துள்ளது.
மேலும் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிப்பதையும் அரசாங்கம் நிறுத்தியுள்ள அதேவேளை மாணவர்கள் வகுப்பறைகளில் முகக்கவசம் அணியுமாறு ஆலோசிக்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பிரித்தானியாவில் 12 வயதைத் தாண்டியவர்களில் 84 சதவீதமானவர்களுக்கு, இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன், 81 சதவீதமானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#WorldNews
You must be logged in to post a comment Login