Connect with us

செய்திகள்

சட்டவிரோத மணல் அகழ்வு! – ஆபத்தின் விளிம்பில் இரணைமடு குளம்

Published

on

iranaimadu

கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுக்கடங்காது இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வால், மாவட்டத்தின் மிகப்பெரும் வளமான இரணைமடு குளம் ஆபத்தின் விளிம்பில் உள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ‌ரூபவதி கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல், மாவட்டச் செயலக மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில், நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்றது.

இதில் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

“சில வருடங்களே இங்கு அதிகாரிகளாகிய நாங்கள் கடமையில் இருப்போம். ஆனால், இங்குள்ள மக்களும் சமூகமும் இப் பிரதேசத்திலேயே தொடர்ந்தும் இருக்கப் போகின்றனர்.

மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.

இரணைமடு குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கையால் எதிர்காலத்தில் பெரியதொரு வளத்தை நாங்கள் இழந்து போக முடியாது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களும் அழிவுகளும் அதிகமாக இருக்கும்.

Advertisement

எமது நிலத்தின் வளங்களை பாதுகாக்க சமூகத்தினுடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிக மிக அவசியமானது.

இந்த அடிப்படையில், முதற்கட்டமாக 5 இடங்களில் இராணுவ காவலரண்களை அமைத்து இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

“அதற்கு கமக்காரர் அமைப்புகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து இடங்களை அடையாளப்படுத்தி, காவலரண்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வழங்க வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

Jey IT Solutions - A London Based Web Agency

Advertisement

ஜோதிடம்

money plant1 money plant1
ஜோதிடம்5 நாட்கள் ago

வீட்டில் பண மழை பொழிய மணி பிளான்ட் செடியை இவ்வாறு வையுங்கள்

வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதிஷ்டம் செழித்து பண மழை பொழிய வேண்டுமா? மணி பிளான்ட் செடியை இப்படி வையுங்கள். மணிபிளான்ட் உங்களுடைய வீட்டில் பணமழை பொழிய வேண்டும்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (26.05.2022)

Medam வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகளைச் செய்து முடிப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். வீட்டுத் தேவைக்காக செலவுகள் கைமீறிப் போகும். பிள்ளைகளின் ஆசைக்காக வீட்டை அழகுப்படுத்துவீர்கள்....

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 15
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (25.05.2022)

Medam விவகாரங்களை வளர்க்காமல் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். உயரதிகாரிகளின் இடையூறு உங்களைச் சிரமப்படுத்தும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகி இணக்கமான நிலை...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 14 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 14
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (24.05.2022)

Medam குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனத் துணிவுடன் பெண்கள் காரியம் ஆற்றுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட வில்லங்கங்களை விலக்க முயற்சிப்பீர்கள். புதிய நண்பர்களிடம் தொழில் ரகசியங்களைக்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 13 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 13
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (23.05.2022)

Medam குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்களின் ஒத்தாசையை எதிர்பார்க்க வேண்டாம். ஆன்லைன் ரம்மி விளையாடுவது ஆபத்து. அதனால் பணத்தை இழக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 12 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 12
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (22.05.2022)

Medam நிமிர்ந்து நின்று எதையும் சமாளிப்பீர்கள். நினைத்த காரியத்தில் நிதானமாக வேலை செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் துறையை மேம்படுத்த கடுமையாக உழைப்பீர்கள். திட்டமிட்டு வெளியூர்ப் பயணங்கள்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 11 WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 11
ஜோதிடம்1 மாதம் ago

இன்றைய ராசிபலன் (18.05.2022)

Medam குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்களின் ஒத்தாசையை எதிர்பார்க்க வேண்டாம். ஆன்லைன் ரம்மி விளையாடுவது ஆபத்து. அதனால் பணத்தை இழக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில்...

error: Content is protected !!