செய்திகள்
பேரூந்தில் நின்று செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
பேரூந்தில் இருக்கைகளை விட அதிகமான பயணிகளை நடத்துநர்கள் தொடர்ந்தும் ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான பஸ் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நிற்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருக்கை கொள்ளளவுக்கேற்ப பயணிகளை ஏற்றிச் செல்லும் விதிமுறைகளை மீறும் அனைத்து பஸ்களையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும் கிராமப்புற வீதிகளில் இவ்விதிமுறை மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால், பஸ்களில் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு தனியான கட்டணம் அறிமுகப்படுத்தப்படும்..
இருக்கைகள் கிடைக்காத பட்சத்தில், பஸ்களில் நின்று கொண்டு பயணிப்பதற்கான கட்டணத்தை பயணிகள் செலுத்த முடியும்.
பஸ் நடத்துனர்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் நாட்டின் நிலைமைக்கு ஏற்ப திருப்திகரமான கட்டணத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், மாற்று வழிகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login