செய்திகள்
‘ஐயா என்ர வேலை முடிஞ்சுது’ – திடீரென இறங்கிய விமானம்!!
‘என்ர வேலை நேரம் முடிஞ்சுது என்னால் விமானத்தை இயக்க முடியாது’ என விமானி சொன்ன சம்பவம் சவூதி தம்மம் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நோக்கி பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு வந்தது.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மோசமான வானிலை நிலவியது. இதனால் சவூதியின் தம்மம் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வானிலை சீரடைந்ததும் விமானம் இஸ்லாமாபாத் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் விமானத்திலேயே அமர்ந்திருந்தனர்.
ஆனால் வெகுநேரம் ஆகியும் வானிலை சீரடையவில்லை. அதற்குள் விமானியின் பணி நேரம் முடிந்துவிட்டது.
அனுமதிக்கப்பட்ட பணி நேரம் முடிந்துவிட்டதால் மேற்கொண்டு விமானத்தை தன்னால் இயக்க முடியாது என விமானி கூறி உள்ளார்.
இதனால் பயணம் தாமதமானது. ஆத்திரம் அடைந்த பயணிகள், விமானத்தை விட்டு இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலைமை மோசடைந்ததையடுத்து விமான நிலைய பாதுகாவலர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயணிகளிடம் பேசி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பயணிகளை அமைதிப்படுத்திய அதிகாரிகள், விமானம் புறப்படும் வரை ஹோட்டல்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.
அனுமதிக்கப்பட்ட நேரம் பணியாற்றிய பின் விமானி ஓய்வெடுக்க வேண்டும். ஏனெனில் அது விமானப் பாதுகாப்பிற்கு அவசியம் என விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார்.
#World
You must be logged in to post a comment Login