செய்திகள்
கொரோனாவே இப்பதான் வந்திச்சா!! – அது எந்த நாடு?
கொரோனா உலகளாவிய ரீதியில் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது தான் கிரிபாடி நாட்டில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக கிரிபாடி நாடு கொரோனா ஊரடங்கை அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து சுமார் 4,800 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சிறிய தீவு தேசத்தில் 1.2 லட்சம் பேர் வாழ்கிறார்கள். கடந்த வாரம் வரை இந்த தேசத்தில் இருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
கடந்த செவ்வாய்கிழமை, பிஜி நாட்டிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த 54 பேரில் 36 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கிரிபாடி மக்கள் அத்தியாவசியத் தேவைகள் தவிர வேறு காரணங்களுக்கு வெளியே வர வேண்டாம் என அரசினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
#World
You must be logged in to post a comment Login