செய்திகள்
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மின்சார சபைக்கு எரிபொருள்! – பேச்சுவார்த்தை இன்று
மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
எவ்வாறெனினும் நாளை 18ஆம் திகதிவரை வரை நாட்டில் மின் துண்டிப்பு இடம்பெறாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் காமினி லொக்குகே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் தொன் எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மின் துண்டிப்பு மேற்கொள்வதற்கான அவசியம் ஏற்படாது என நினைக்கின்றேன்.
எமக்கு 3,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்காக கிடைத்துள்ளது. அதற்கிணங்க நாளை 18ஆம் திகதி வரை மின் துண்டிப்பு இல்லாமல் தொடர்ச்சியாக எம்மால் நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். இன்றைய தினம் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதய கம்மன்பிலவுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.
இதன்போது எதிர்வரும் 25ஆம் திகதி வரைக்குமான எரிபொருளை பெற்றுத்தருமாறு நாம்பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் வேண்டுகோள் விடுப்போம்.ஒரு வருடத்திற்கு மின்சார சபைக்கு தேவையான எரிபொருளின் அளவு தொடர்பில் நாம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளோம். அதற்கிணங்க இன்றைய தினம் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login