செய்திகள்
இருமடங்காகும் ஆசிரியர் சம்பளங்கள்!!!
கர்நாடக மாநில ஆசிரியர்களின் சம்பளம் இருமடங்காக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசவை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியால் நிர்வகிப்படுகிறது.
கர்நாடக மாநில விருந்தினர் விரிவுரையாளர்கள் தமக்கான ஊதியத்தை அதிகரித்து தருமாறு அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கர்நாடக அரசு மூவர் அடங்கிய குழுவை நியமித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில் குறித்த குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதனையடுத்து கருத்த தெரிவித்த கர்நாடக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா,
விருந்தினர் விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனிப்பட்ட முறையில் தனிக் கவனம் செலுத்தியிருந்தார்.
விருந்தினர் விரிவுரையாளர்களுக்கு யுஜிசி நிர்ணயித்த தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.13 ஆயிரமும், யுஜிசி நிர்ணயித்த தகுதி இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.11 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.
தற்போது குறைந்தபட்சம் மாதம் ரூ.26 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.32 ஆயிரமாக சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது.என்றார்.
#World
You must be logged in to post a comment Login