செய்திகள்
தமிழகத்தில் வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்
தமிழகத்தில் கொரோனா பரவலிற்கு முட்டுக்கட்டை போடுவதற்கும் , ‘ஒமைக்ரான்’ சமூக பரவல் ஆககூடாது என்பதற்காகவும் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது.
அதன்படி கடந்த 6-ந் திகதி தொடக்கம் இரவு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக காய்கறி, இறைச்சி கடைகள், ஆடை-நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. மதுபான கடைக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் முற்றிலும் இயங்காது. குறைந்த எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் மட்டும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டது. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் நடைபெறுகிறது.
ரயில்இ விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. பயணிகளை இறக்கிவிட்டு திரும்பும்போது அவர்களிடம் டிக்கெட் பிரதியை பெற்று வைத்திருக்க வேண்டும் என ஓட்டுனர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.
நேற்று இரவு 10 மணியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நேற்று இரவில் தொடங்கப்பட்ட வாகன சோதனை இன்றும் நீடித்தது.
சென்னையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 312 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டது.
அத்தியாவசிய பணிகளுக்காக சென்றவர்களை அடையாள அட்டையை பார்த்து உறுதி செய்த பிறகே பொலீசார் அனுமதித்தனர். ஒவ்வொரு சந்திப்புகளில் 5 காவலர்கள் வரை கண்காணிப்பு பணியில் இருந்தார்கள். முக்கிய சந்திப்புகளில் பந்தல்களை போட்டு தடுப்புகளை அமைத்து கண்காணித்தனர். இதன் காரணமாக சென்னையில் இன்று பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சென்னையை போலதே திருச்சி, மதுரை, நெல்லை,தூத்துக்குடி, தென்காசி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பகிறது
#worldnews
You must be logged in to post a comment Login