செய்திகள்
சலுகை விலையில் பொருட்கள்:வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு
நேற்று முதல் சதொச ஊடாக குறைந்த விலையில் பெற முடியும் என அமைச்சர் பந்துல தெரிவிதார்
1998 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் அழைத்தால் வீடுகளுக்கே விநியோகம் செய்யப்படும்
10 kg சுப்பர் சம்பா , 01 kg வெள்ளை சீனி , 01 kg பருப்பு, 01 kg இடியப்ப மா ,500 g நெத்தலி , 400 g நூடில்ஸ் உட்பட பல பொருட்கள்
லங்கா சதொச ஊடாக சலுகை விலையில் பொதியை வழங்கும் நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல ,
20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த பொதியை 3998 ரூபாவிற்கு சதொசவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தப் பொதியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அதன்படி 10 kg சுப்பர் சம்பா, 1 kg வெள்ளைச்சீனி, 1 kg பருப்பு, 1 kg இடியப்ப மா, 500 g நெத்தலி, 400 g நூடில்ஸ்,400 g உப்பு, 2 தேங்காய்ப்பால் பக்கெற் (330 ml.), 100 g மிளகாய்த் தூள், 100 g மஞ்சள் தூள், 100 g தேயிலை, 80 கிராம் பொடி லோஷன், 100 g சதொச சந்தன சவர்க்காரம், 100 ml. கை கழுவும் திரவம், 90 g சோயா மீற், சதொச TFM சலவை சவர்க்காரம் என்பன இப்பொதியில் அடங்கியிருக்கும்.
இதன் மூலம் நுகர்வோர் 1750 ரூபா நிவாரணத்தைப் பெற முடியும் என அமைச்சர் கூறினார்.
ஒரு kg நாட்டு அரிசியின் விலையை 105 ரூபாவுக்கு குறைவாகவும், சுப்பிரி சம்பா ஒரு kg 130 ரூபாவுக்கு குறைவாகவும் இந்த ஆண்டு இறுதி வரையில் பராமரிக்கும் பொறுப்பை லங்கா சதொச மேற்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பயறு 225 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு kg பயறு 225 ரூபாவுக்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
விவசாயிகளிடமிருந்து ஒரு kg பயறு 450 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக அமைச்சர் கூறினார்.
பயறு 225 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்களில் மட்டுமே கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.
#srilankanews
You must be logged in to post a comment Login