செய்திகள்
வரி செலுத்தின் எவரும் அரிசியை இறக்குமதி செய்ய முடியும்! – அரசு அனுமதி
நாட்டில் எவரும் அரிசியை இறக்குமதி செய்யலாம் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சந்தையில் தற்போது அரிசியின் விலை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முகமாக அரிசியை இறக்குமதிசெய்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்கள், இறக்குமதி செய்யும் ஒரு கிலோ அரிசிக்கு 25 சதம் வரி செலுத்தி அரிசியை இறக்குமதி செய்யலாம்.
500 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சதொச நிறுவனங்கள் ஊடாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை சந்தையில் 150 ரூபாவை விட அதிகரிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாது – என்றார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட 500 வரையான அரிசி கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login