செய்திகள்
அணு ஆயுத தடை ஒப்பந்தம் : கையெழுத்திடும் இலங்கை!!


அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்ததில் இலங்கை கையொப்பமிடுவதற்காகவும், அதனை ஏற்று அங்கீகரிக்கும் செயன்முறையை ஆரம்பிப்பதற்காகவும் வெளி விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உலக நாடுகள் அணுவாயுத பாவனையை குறைக்கும் விதமாக இவ்வொப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த ஒப்பந்தம் 122 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2017 ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையில் நிறைவேற்றப்பட்டது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதுவரை அதற்காக கையொப்பமிட்ட 86 நாடுகளில் 57 நாடுகள் ஏற்று அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.