செய்திகள்
சுகாதார வழிகாட்டல்களுடன் சிவனொளிபாத மலை தரிசனம்!


சிவனொளிபாத மலைக்கான பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பக்தர்கள் புதிய சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவகால பூரணை தினமான இன்று 2022 ஆம் ஆண்டுக்கான யாத்திரைக்காலம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2022 மே மாதம் 16 ஆம் திகதியுடன் பருவகாலம் நிறைவுப் பெறும் வரை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கேற்ப,
தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டமைக்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன் பிரதியை உடன் வைத்திருக்க வேண்டும், தற்காலிக விடுதிகளை ஏற்பாடு செய்யவோ பராமரிக்கவோ கூடாது, சிவனொளிபாதமலை சுற்றுவட்டாரத்தில் யாசகம் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு முகக் கவசம் அணிதலும், சமூக இடைவெளியை பேணுதலும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.