செய்திகள்
மதத்தின் பெயரில் இடம்பெறும் வன்முறை – கண்டித்த பிரதமர்!


மதத்தின் பெயரைச் சொல்லி வன்முறைகளில் ஈடுபடுவோர்களிடம் மிதமாக நடந்துக் கொள்ளப்போவதில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் உரையாடும் போதே இவர் இதனை தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சியல்கொட்டில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இலங்கையருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வொன்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தன்னுடைய உயிரை பணயம் வைத்து இலங்கையரின் உயிரைக் காப்பாற்ற முயன்ற மாலிக் அத்னனின் செயலை பாராட்டி சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டது.