செய்திகள்
பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை!


பிரான்சில் போலி யூரோ தாள்கள் உலா வருகிறது என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவலுக்கிடையே, கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையில், பிரான்ஸ் பொலிசார் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், கிறிஸ்துமஸ் தின சந்தைகளைக் குறி வைத்து, போலி யூரோ தாள்கள் பரவி வருகிறது.
நாட்டில், தென்கிழக்கு பிராந்தியங்களை அதிகமாக குறி வைத்து 20 யூரோ, 50 யூரோ மற்றும் 100 யூரோக்களில் போலித் தாள்கள் உலா வருகிறது. கடந்த வாரம் நீஸ் நகரில் இது போன்ற போலி தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
போலி நாணயத்தாள்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், 03 வருடங்கள் சிறை தண்டனையும், 75.000 யூரோ அபராதமும் விதிக்கப்படும் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.