செய்திகள்
இந்தியா சுழலில் சிக்கி சிதறிய நியுஸிலாந்து!!!


நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 372 ஓட்டங்களினால் மிகச் சிறப்பான வெற்றியொன்றைப் பதிவு செய்ததன் மூலம் இந்திய அணி தொடரை 1க்கு 0 என்று வெற்றி கொண்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் 540 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் இந்திய அணியின் சுழல் ஜாம்பவான் அஸ்வின், ஜெயந் ஜாதவ் தலா நான்கு இலக்குகளையும் அக்சர் பட்டேல் ஒரு இலக்கையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக மயாங் அகர்வால் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடர் நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவு செய்யப்பட்டார்.
முன்னதாக இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நியூஸிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரையும் 3 க்கு 0 எனும் அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியிருந்தது.
இதேவேளை டெஸ்ட் அரங்கில் அதிக இலக்குகளை கைப்பற்றிய இந்தியர்கள் வரிசையில் அஸ்வின் 300 இலக்குகளுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியதுடன் இந்தியாவில் அதிக ஓட்டங்களில் வெல்லப்பட்ட டெஸ்ட் போட்டியாகவும் இது பதிவானது.