சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி!
அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி முதல் 5 வயது தொடக்கம் 11 வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
சிறுவர்களுக்கு குறைவான அளவே தடுப்பு மருந்து செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கிரேக் ஹன்ட் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தடுப்பூசி ஆலோசனை அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார் .
அவுஸ்ரேலியாவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர்.
#WorldNews