செய்திகள்
தாய்லாந்திலும் ஒமிக்ரொனா?


தாய்லந்திலும் ஒமிக்ரொன் வைரஸ் தொற்றியுள்ளதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒமிக்ரொன் வைரஸ் உலகின் 46 நாடுகளுக்கு தொற்றியுள்ள நிலையில் இவ் வைரஸ் தொற்றை தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
2019-ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு நிலைகளில் உருமாற்றமடைந்துதீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில் , தற்போது ஒமிக்ரொன் என்ற புதிய வகை திரிபாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது.
இந்த ஒமிக்ரொன் திரிபு மற்ற வைரசை ஒப்பிடும் போது மிக வேகமாக பரவக்கூடும் என WHO தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 47-வது நாடாக ஒமிக்ரொன் வைரஸ் தற்போது தாய்லாந்திலும் தொற்றியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி தாய்லாந்து வந்த 35 வயது நிரம்பிய அமெரிக்கருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஒமிக்ரொன் தொற்றுடையவரை தனிமைப்படுத்தப்பட்டு அவரை தாய்லாந்து சுகாதாரத்துறை தீவிர கண்காணித்து வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.