செய்திகள்
கிளிநொச்சியில் எறிகணை வெடித்து இளைஞன் பலி!!!


கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் எறிகணை ஒன்றை வெட்டியபோது அது வெடித்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை சம்பவ இடத்தில் நின்ற 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மர்மப் பொருள் ஒன்றை கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது குறித்த பொருள் வெடித்துள்ளது.
இச்சம்பவத்தின் போது சிவலிங்கம் யுவராஜ் (25) ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.