செய்திகள்
பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் ஒமிக்ரோன்- சர்வதேச நாணய நிதியம்


ஒமிக்ரோன் என மாறுபாடு அடைந்திருக்கம் கொரோனா வைரஸினால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி தன் மதிப்பீடுகளைக் குறைக்க அதிகமாக வாய்ப்புள்ளது என உலகளாவிய கடன் வழங்குநரின் தலைவர் ராய்ட்டர்ஸ் கூறியுள்ளார்.
சமகாலத்தில் ஓமிக்ரோன் 40 வீதத்திற்கு அதிகமாக தனது வீரியத்தை பரப்பியுள்ளது.
இதனால் பல அரசாங்கங்கள் தமது பயண விதியை தடைசெய்துள்ளது. பயண விதிகளை கடுமையாக்கியுள்ளது.
இதனால் இறக்குமதி ஏற்றுமதி சார்ந்த விடயங்கள் சீர்குலைந்துள்ளது. எனவே இனி வரும் காலங்களில் உலகம் பொருளாதார சிக்கலை எதிர்கொள்கின்ற சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து குறித்த மாநாட்டில் உரையாற்றிய நிறுவன இயக்குனர் கிறிஸ்டிலினா ஒமிக்ரோன் மிக வேகமாக பரவ கூடிய சாத்தியப்பாடுகளை கொண்டுள்ளளது.
அதனால், உலக கொருளாதார வளர்ச்சி கணிப்புகளில் சில தரமிறக்கங்களை தாம் அவதானித்ததாக தெரிவித்தார்.
மேலும் ஓமிக்ரோன் தொடர்பாக குறிப்பிடுகையில் அது மனித நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாப்பிலிருந்து இலகுவில் தப்பிக்க கூடிய ஒன்று எனவும உத்தியோகபூர்வமாக அடையாளப்படுத்தினர்.
ஜரோப்பா மற்றம் அமெரிக்காவின் சில பகுதிகள் டெல்டா மாறுபாடின் தொற்றுநோய்களின் அலைகளுடன் போராடி வருகின்ற இந்நிலையில் கொவிட் 19 தொடர்பான லொக்டவுண்கள் மற்றும் இடையூறுகளில் இருந்து இன்னும் பொருளாதாரங்களை புதிய திரிபு மேலும் சீர்குலைக்க கூடும்.
ஆகவே 99 சதவீதமான தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டாவுக்கு சமமாக தற்போதைய மாறுபாட்டினை கட்டுபடுத்த வேண்டும்.
அதற்கான தடுப்பூசிகளை போட அதிகாரிகள் விரைவாக செயற்பட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.