செய்திகள்
சமூக வலைத்தள உரையாடலின் உச்சத்தில் – எமோஜின்கள்


2021 ஆம் ஆண்டுக்கான சமூக வலைதள ஆராய்ச்சி நடவடிக்கை ஓன்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த ஆராய்ச்சியில், வட்ஸ்அப் , பேஸ்புக், இன்டாகிராம் போன்ற பல சமூக வலைத்தள உரையாடல்களில் அதிகமாக எமோஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையை யுனிகோட் கன்சார்டியம் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
மேலும், இந் நிறுவனம் எமோஜிகள் குறித்து பல சுவாரஸ்யமான அறிக்கைகளை வெயியிட்டுள்ள நிலையில், மொத்தமாக 3663 எமோஜிகள் உள்ளன எனவும், அதில் அதிகமாக குறிப்பிட்ட சில எமோஜிகள் முதல் 10 இடங்களை பெற்றள்ளன எனவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இவை மனித மனங்களில் உள்ள எண்ணங்களை மிக இலகுவில் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை எனவும் குறித்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.