2021 ஆம் ஆண்டின் இறுதிச் சூரிய கிரகணம் இன்று!
2021 ஆம் ஆண்டின் இறுதிச் சூரிய கிரகணம் இன்று (04) இலங்கை நேரப்படி, இந்தச் சூரிய கிரகணம் காலை 10.59 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 3:07 மணிக்கு முடிவடையும்.
இது முழுமையான சூரிய கிரகணமாக இருக்கும் எனவும், உலகின் பல பகுதிகளில் இருந்து இது தெரியும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
இந்தச் சூரிய கிரகணம் அந்தார்டிகா, தென்னாப்பிரிக்கா, அட்லாண்டிக்கின் தெற்கு பகுதிகள், அவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் தெரியும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
இந்தக் கிரகணத்தை இலங்கையில் இருந்து பார்க்க முடியாது என்றாலும், அந்தார்டிகாவின் யூனியன் பனிப்பாறையிலிருந்து இதனை நேரடியாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது.
இக் கிரகணத்தின் போது சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டாம் என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews #WorldNews