செய்திகள்
‘ஒமிக்ரான்’ திரிபு எதிரொலி – புதிய கட்டுப்பாடுகள் அமுலில்!
தன்னை பாதுகாக்க தமிழகம் பல தடைகளை விதித்துள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்கள் ஒமிக்ரானில் இருந்து மக்களை பாதுகாக்க பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறன.
இந்நிலையில் தமிழக அரசும் பல பாதுகாப்பு நடவடிக்கைகை எடுத்துள்ளது.
அதன் நிமிர்த்தம் பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள்,தென்னாப்பிரிக்கா,பிரேசில்,வங்கதேசம்,போஸ்ட்வானா,சீனா,மொரீஷியஸ்,நியூசிலாந்து,ஜிம்பாப்வே,சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் என பல நாடுகளை” High risk நாடுகள்” எனும் பட்டியலில் சேர்த்துள்ளது.
இந் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அத்தோடு கடுமையான சுகாதார வழிகாட்டியை யும் வெளியிட்டுள்ளது.
அதில் உள்ளவை,
*தமிழகம் வரும் பயணிகள் விமானத்தில் தமக்கு தொற்று இல்லை எனும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
*விமானத்திலிருந்து வந்து இறங்கியவுடன் கட்டய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
*தொற்று இல்லையாயின் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதோடு எட்டாம் நாள் மீண்டும்
பரிசோதனை எடுக்கப்பட்டு அதிலும் தொற்று இல்லையாயின் தனிமைப்படுத்தல் நிறைவு செய்யப்படும்.
* அவ்வாறு தொற்று காணப்படின் உடனடியாக அவரது மாதிரி மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு,
தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு, வைத்திய கண்காணிப்பு மற்றும் சிகிச்சையும் வழங்கப்படும்.
* தொற்று இல்லையாயின் அவர் வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்.
அத்தோடு தமிழ்நாட்டின் ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் ஓர் சுகாதார வைத்திய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் தொற்றிலிருந்து பல நாடுகள் தம்மை பாதுகாக்க பல சுகாதார நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் இந்தியாவின் தமிழகம் தன்னை பாதுகாக்க இவ்வாறான நடவடிக்கைகள் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#india
You must be logged in to post a comment Login